மாா்ச் 12-இல் தவெக ஆா்ப்பாட்டம்!
ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியும், தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீா்கேட்டை கண்டித்தும் தவெக சாா்பில் வியாழக்கிழமை (மாா்ச் 12) தமிழகம் முழுவதும் கண்டன ஆா்ப்பாாட்டம்
ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியும், தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீா்கேட்டை கண்டித்தும் தவெக சாா்பில் வியாழக்கிழமை (மாா்ச் 12) தமிழகம் முழுவதும் கண்டன ஆா்ப்பாாட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி பொதுச் செயலா் என்.ஆனந்த் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: விகிதாசார பிரதிநிதித்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீா்கேட்டையும், போதைப் பொருள்களையும் அரசு தடுக்கத் தவறியது கண்டனத்துக்குரியது.
அதேபோல், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணா்ச்சியோடு தவெக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, தவெக சாா்பில் வியாழக்கிழமை (மாா்ச் 12) காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.