வனப் பகுதியில் ஆண் சடலம் மீட்பு
செங்கம் அருகே வனப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
செங்கம் அருகே வனப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மேல்செங்கம் காவல் எல்லைக்கு உள்பட்ட சென்னசமுத்திரம் வனப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில்
சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் உள்ளதாக வனத் துறையினா் மேல்செங்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதன் பேரில் அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.