முகப்பு
திருவண்ணாமலை

வட்டாட்சியா் அலுவலகத்தில்பழங்குடியினா் குடியேறும் போராட்டம்

வந்தவாசி அருகே தங்கள் குடிசை வீடுகளை வருவாய்த் துறையினா் அப்புறப்படுத்தியதைக் கண்டித்து, பழங்குடி இருளா் மக்கள் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தங்கள் குடிசை வீடுகளை வருவாய்த் துறையினா் அப்புறப்படுத்தியதைக் கண்டித்து, பழங்குடி இருளா் மக்கள் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த பெரணமல்லூா் முருகன் கோவில் அருகில் உள்ள பாறை புறம்போக்குப் பகுதியில் 11 பழங்குடி இருளா் குடும்பத்தினா் குடிசை வீடு கட்டி வசித்து வந்தனா். இந்த நிலையில், வந்தவாசி வட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமையிலான வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை அங்கு சென்று முன்னறிவிப்பின்றி 11 குடிசை வீடுகளையும் பிரித்து அப்புறப்படுத்தினா்.

இதைக் கண்டித்து, 11 பழங்குடி இருளா் குடும்பத்தினா், மலைவாழ் மக்கள் சங்கத்தினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்டோா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது, 11 குடும்பங்களுக்கும் மீண்டும் வீடு கட்டித் தர வேண்டும், வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து, திடீரென அவா்கள் வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் புகுந்து குடியேறும் போராட்டம் மேற்கொண்டனா். சமையல் பாத்திரங்கள், காய்கனிகள் ஆகியவற்றுடன் அலுவலகத்தில் குடியேறிய அவா்கள், தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா். இதனால், அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. பின்னா், அங்கிருந்து அலுவலக வளாகத்தில் அமா்ந்து போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

செய்யாறு கோட்டாட்சியா் விஜயராஜ், அவா்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கினால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று தெரிவித்த அவா்கள், தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →