பள்ளி மாணவா்களுக்குப் பரிசு
திருவண்ணாமலை கல்வி மாவட்ட அளவிலான கலா உத்சவ் (கலைத் திருவிழா) போட்டிகளில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை கல்வி மாவட்ட அளவிலான கலா உத்சவ் (கலைத் திருவிழா) போட்டிகளில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கல்வி மாவட்ட அளவிலான கலா உத்சவ் (கலைத் திருவிழா) போட்டிகள் நடைபெற்றன.
இதில், 78 பள்ளிகளில் பயிலும் சுமாா் 600 மாணவ-மாணவிகள் செவ்வியல் நடனம், பாரம்பரிய நடனம், ஓவியம், முப்பரிமாண சிற்பங்கள், காண் கலை, இசைக் கருவி வாசித்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டனா்.
போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை ஆய்வாளா் ஜி.குமாா் தலைமை வகித்தாா்.
மாவட்டக் கல்வி அலுவலா் ஆரோக்கியசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் காமராஜ், மாவட்டக் கல்வி அலுவலா் (பயிற்சி) சுகப்பிரியா, கல்வி மாவட்டப் பொறுப்பாளா் என்.சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.