முகப்பு
திருவண்ணாமலை

செங்கம் அருகே 433 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 433 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 433 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட காஞ்சியில் தமிழக அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்குதல், அரசு புதிய கட்டடங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை துணைத் தலைவா் பிச்சாண்டி, திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் சரவணன், கிரி, புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் முத்துகுமாரசாமி வரவேற்றாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்துகொண்டு 433 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா், இந்தப் பகுதியில் உள்ள அரசு அலுவலங்களில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை திறந்துவைத்தாா்.

விழாவில் மருத்துவா் கம்பன், திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஸ்ரீதரன், தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் சீனுவாசன், கவுன்சிலா் பொன்னி, முனியப்பன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.