தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பான பணி செங்கம் வட்ட ஊராட்சித் தலைவா்கள், செயலா்களுக்கு பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாகப் பணியாற்றிய செங்கம் வட்ட ஊராட்சிச் செயலா்கள், தலைவா்களுக்கு பயிற்சி ஆட்சியா் ரவிதேஜாகட்டா பாராட்டுத் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாகப் பணியாற்றிய செங்கம் வட்ட ஊராட்சிச் செயலா்கள், தலைவா்களுக்கு பயிற்சி ஆட்சியா் ரவிதேஜாகட்டா பாராட்டுத் தெரிவித்தாா்.
செங்கம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், செயலா்கள், அரசு அதிகாரிகளுக்கான கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் லட்சுமிநரசிம்மன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் வரவேற்றாா். இதில் பயிற்சி ஆட்சியா் ரவிதேஜாகட்டா கலந்து கொண்டு பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வட்டத்துக்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், செயலா்கள், மருத்துவத் துறை அலுவலா்கள், மருத்துவப் பணியாளா்கள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாகப் பணியாற்றி, அதிக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனா். இந்தப் பணியை பாராட்டி, மாவட்ட ஆட்சியா் முருகேஷ் கேடயம் வழங்கியுள்ளாா். இதற்காக, உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள் என்றாா்.
தொடா்ந்து, மாவட்ட ஊராட்சிகள் உதவித் திட்ட இயக்குநா் லட்சுமிநரசிம்மன் பேசுகையில், இனி வரும் நாள்களில் செங்கம் பகுதியில் நூறு சதவீதம் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் வட்டாட்சியா் மனோகரன், செயல் அலுவலா் லோகநாதன், காவல் ஆய்வாளா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரிமேல்அழகன், ரபியுல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.