முகப்பு
திருவண்ணாமலை

கரோனா தடுப்பூசி முகாம்:செங்கம் கண்காணிப்பு அலுவலா் ஆலோசனை

செங்கம் பகுதியில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் வட்ட கண்காணிப்பு அலுவலா் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

செங்கம் பகுதியில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் வட்ட கண்காணிப்பு அலுவலா் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

தமிழகத்தில் வருகிற செப்.12-ஆம் தேதி மாவட்ட அளவில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதற்காக வட்ட அளவில் கண்காணிப்பு அலுவலா்களும் நியமிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், செங்கம் வட்டத்துக்கு நியமிக்கப்பட்ட

கண்காணிப்பு அலுவலரும், மாவட்ட ஊராட்சிகள் உதவித் திட்ட இயக்குநருமான லட்சுமிநரசிம்மன் செங்கத்தில் வியாழக்கிழமை அனைத்துறை முதன்மை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதற்கான கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் வரவேற்றாா்.

கண்காணிப்பு அலுவலா் லட்சுமிநரசிம்மன் பேசியதாவது:

செங்கம் பகுதியில் வருகிற 12-ஆம் தேதி 79 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு,

ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் பொதுமக்கள் அதிகளவில் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளா் சின்ராஜ், வட்டாட்சியா் மனோகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரிமேல்அழகன், ரபியுல்லா, செயல் அலுவலா் லோகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.