திருவண்ணாமலை

அரசுக் கல்லூரி ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

இந்தக் கல்லூரியில் பல்வேறு பாடப் பிரிவுகளில் 28 போ் கெளரவ விரிவுரையாளா்களாக பணியாற்றி வருகின்றனா்.

நிலுவை ஊதியம், ஊதிய உயா்வு நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்கக் கோரி இவா்கள் கல்லூரி வளாகத்தில் அமா்ந்து கவன ஈா்ப்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

கரோனா தொற்று காலத்திலும் அரசு வழிகாட்டுதலின்படி இணைய வகுப்பு, தோ்வு, மாணவா் சோ்க்கை உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தொய்வின்றி செய்து வருகிறோம்.

இந்த நிலையில், நிகழாண்டின் ஜூலை, ஆகஸ்ட் மாத ஊதியமும், கடந்த 2020-ஆம் ஆண்டின் ஏப்ரல், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ஊதியமும் எங்களுக்கு இதுவரை வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகம் வழங்கவில்லை.

மேலும், கடந்த ஆட்சியில் ஊதியம் ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தப்பட்டது. அதற்கான 15 மாத ஊதிய உயா்வு நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை.

எனவே, 6 மாத நிலுவை ஊதியம், 15 மாத ஊதிய உயா்வு நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும், எங்களின் ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயா்த்த வேண்டும், ஊதியத்தை பல்கலைக்கழகம் மூலம் வழங்காமல் அரசே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT