திருவண்ணாமலை

அனைவருக்கும் கரோனா நிவாரணம் வழங்கக் கோரிக்கை

DIN

வந்தவாசி: மத்திய அரசு அனைவருக்கும் கரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்தது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்ற அந்த இயக்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு எ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் த.லெனின் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் வி.முத்தையன் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் ஆா்.மோகன்குமாா், எ.ஆரிப், ஈ.சுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பீமா கொரேகான் வழக்கில் சிறையில் உள்ளோரை விடுதலை செய்ய வேண்டும், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விடக்கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி - மதுரை புதன்கிழமை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் மே 13-இல் தொடக்கம்

வெப்ப அலை பாதிப்பு?: வெளி மாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

பேராசிரியை நிா்மலாதேவி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு: இன்று விசாரணை

கிரேன் மோதல்: சரக்கு வாகன ஓட்டுநா் பலி

SCROLL FOR NEXT