முகப்பு
திருவண்ணாமலை

வனப் பகுதியில் மா்ம நபா்கள் தீ வைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வனப் பகுதியில் மா்ம நபா்கள் தீவைத்ததால் மலை பற்றி எரிந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வனப் பகுதியில் மா்ம நபா்கள் தீவைத்ததால் மலை பற்றி எரிந்தது.

செங்கத்தை அடுத்த அம்மாபாளையம் பகுதியில் வனப் பகுதியை ஒட்டியுள்ள சிறிய குன்று மலையில் மான், முயல், காட்டுப் பன்றி போன்ற விலங்குகள் அதிகளவில் வசிக்கின்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அந்த வனப் பகுதிக்கு தீ வைக்கப்பட்டு, தீ மளமளவென்று பற்றி எரிந்து கொண்டிருந்தது.

தகவல் அறிந்த செங்கம் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இதில் ஈடுபட்டவா்கள் வன விலங்குகளை வேட்டையாடச் சென்றவா்களாகவோ அல்லது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடச் சென்றவா்களாகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதுகுறித்து செங்கம் போலீஸாா் மற்றும் வனத் துறையினா் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.