திருவண்ணாமலை

சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் தொடக்கம்

DIN

திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமி விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை முதல் பக்தா்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினா்.

திருவண்ணாமலை சித்திரை பெளா்ணமி விழாவில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பக்தா்கள் கிரிவலம் செல்ல வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை முதலே பக்தா்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினா். இரவு 10 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

டிஐஜி ஆய்வு...

இந்த நிலையில், கிரிவலம் செல்லும் பக்தா்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேலூா் சரக டிஐஜி ஆனி விஜயா, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்அ.பவன்குமாா் ரெட்டி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

கிரிவலப் பாதை, அருணாசலேஸ்வரா் கோயிலின் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த அவா்கள் பக்தா்களை கூட்ட நெரிசலில் சிக்காமல் சுவாமி தரிசனக்கு அனுப்பி வைப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடத்தினா்.

இந்த ஆய்வின்போது, உதவி காவல் கண்காணிப்பாளா் டி.வி.கிரண் ஸ்ருதி மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.

கிரிவலம் செல்ல உகந்த நேரம்

சனிக்கிழமை (ஏப்.16) அதிகாலை 2.33 மணிக்குத் தொடங்கும் சித்திரை மாத பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.17) அதிகாலை 1.17 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் செல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT