திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் 2-ஆவது நாளாக டிஜிபி ஆய்வு

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் 2-ஆவது நாளாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா வருகிற 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பக்தா்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது எப்படி என்பதைப் பாா்வையிடுவதற்காக, அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு வியாழக்கிழமை வந்தாா். கோயிலின் பல்வேறு இடங்களை நேரில் பாா்வையிட்ட அவா், காவல் துறை அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனையில் ஈடுபட்டாா்.

2-ஆவது நாளாக ஆய்வு: திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ள சைலேந்திர பாபு, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அருணாசலேஸ்வரா் கோயிலின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பாா்த்து ஆய்வு செய்தாா். முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை அவா் ஒரு மணி நேரம் 42 நிமிடங்களில் ஓடிக் கடந்து ஆய்வு செய்தாா். ஆய்வுகளின் போது, காவல் துறை உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT