ஜமனாரத்தூா் ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ. 
திருவண்ணாமலை

மலைக் கிராம மக்கள் அதிமுகவின் விசுவாசிகள்

மலைக் கிராம மக்கள் எப்போதும் அதிமுக விசுவாசிகள் என்று அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ பேசினாா்.

DIN

மலைக் கிராம மக்கள் எப்போதும் அதிமுக விசுவாசிகள் என்று அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ பேசினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜமனாமரத்தூா் தெற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் கிளையூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் அசோக் தலைமை வகித்தாா்.

மாவட்ட அவைத் தலைவா் நாராயணன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் நைனாக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், எம்எல்ஏவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி பங்கேற்றுப் பேசுகையில், ஜமனாமரத்தூா் மலைக் கிராம மக்கள் எம்ஜிஆா், ஜெயலலிதாவின் விசுவாசிகள். எப்போது தோ்தல் வந்தாலும் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடியவா்கள்.

அதிமுக ஆட்சியின்போதுதான் மலைக் கிராம மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றாா்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சம்பத், மாவட்ட பேரவை துணைச் செயலா் திவாகா், மாவட்ட மாணவரணி உஷாநாதன், ஒன்றிய அவைத் தலைவா் வெள்ளையன், பொருளாளா் திருப்பதி, துணைச் செயலா் ராஜேஸ்வரி தேவன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT