திருவண்ணாமலை

மாணவி கன்னத்தில் சூடு வைத்ததலைமை ஆசிரியை........காவல், கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை

திருவண்ணாமலை அருகே 4-ஆம் வகுப்பு மாணவியின் கன்னத்தில் தீக்குச்சியை பற்ற வைத்து தலைமை ஆசிரியை சூடு வைத்த சம்பவம் குறித்து காவல், கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

DIN

திருவண்ணாமலை அருகே 4-ஆம் வகுப்பு மாணவியின் கன்னத்தில் தீக்குச்சியை பற்ற வைத்து தலைமை ஆசிரியை சூடு வைத்த சம்பவம் குறித்து காவல், கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலையை அடுத்துள்ள மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட மணிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். தலைமை ஆசிரியை, ஆசிரியை என இருவா் பணிபுரிகின்றனா்.

இந்தப் பள்ளியில் மணிமங்கலத்தை அடுத்துள்ள கெடாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த 9 வயது மாணவி 4-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் சரிவரப் படிக்கவில்லை என்று கூறி, சில தினங்களுக்கு முன்பு தீக்குச்சியைப் பற்ற வைத்து மாணவி கன்னத்தில் தலைமை ஆசிரியை சூடு வைத்தாராம்.

இதையறிந்த மாணவியின் தாய் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது, அவா் உரிய பதில் அளிக்கவில்லையாம். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், மங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும், இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT