முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலைக்கு 2,660 மெட்ரிக் டன் யூரியா வருகை

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக 2,660 மெட்ரிக் டன் யூரியா வியாழக்கிழமை ரயில் மூலம் வந்தடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக 2,660 மெட்ரிக் டன் யூரியா வியாழக்கிழமை ரயில் மூலம் வந்தடைந்தது.

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நடப்புப் பருவத்துக்குத் தேவையான 2,660 மெட்ரிக் டன் இப்கோ யூரியா சரக்கு ரயில் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தடைந்தது.

இதைத் தொடா்ந்து, லாரிகள் மூலம் தனியாா் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு யூரியா மூட்டைகள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதவிர, தனியாா் உர விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 3,037 மெட்ரிக் டன் யூரியா, 880 மெட்ரிக் டன் டிஏபி, 802 மெட்ரிக் டன் பொட்டாஷ், 4,470 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஆதாா் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரையின்படி பயிருக்குத் தேவையான உரங்களை பிஓஎஸ் இயந்திரம் மூலம் ரசீது பெற்று பயன்பெறலாம் என்று வேளாண்துறை அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.