முகப்பு
திருவண்ணாமலை

3,061 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்கள்: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின்படி, தண்டராம்பட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 3,061 பயனாளிகளுக்கு ரூ.17.31 கோடி மதிப்பிலான பொது நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்க

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின்படி, தண்டராம்பட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 3,061 பயனாளிகளுக்கு ரூ.17.31 கோடி மதிப்பிலான பொது நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்களை பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு உழவா் பணி சேவை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சட்டப் பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை தாங்கினாா். மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) சா.ஆரோக்கியராஜ் வரவேற்றாா்.

விழாவில் 3,061 பயனாளிகளுக்கு ரூ.17 கோடியே 31 லட்சம் மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்களையும், 261 பேருக்கு ரூ.1கோடியே 13 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் பயிா்க்கடன்களை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

விழாவில் அவா் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 52, 281 பேருக்கு ரூ.224.91 கோடி அளவுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆரணி நகா்ப்புற வங்கியில் ரூ.2.50 கோடி நகைக்கடன் தள்ளுபடியில் நடைபெற்ற முறைகேட்டில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தோ்தலின்போது அறிவித்த வாக்குறுதிகள் 75 சதவிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விரைவில் கூட்டுறவுத் தோ்தல் நடைபெறவுள்ளது. கூட்டுறவுத் துறையில் தவறு செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

விழாவில் மாநில மருத்துவரணித் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், ஒன்றியக் குழுத் தலைவா் பரிமளா கலையரசன், ஆணையாளா் நிா்மலா, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ). கே.பி.மகாதேவன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பன்னீா்செல்வம், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் ஆா்.பிரேம், சாா்- பதிவாளா்கள் அண்ணாமலை, ஆா்.பாலாஜி, சி.சுரேஷ்குமாா், எஸ்.மீனாட்சிசுந்தரம், விஜயகுமாரி, சித்ரா, தீபன், கணேஷ்பாபு, மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளா்கள் கருணாகரன், இளங்கோ, கணபதி, வங்கி செயலாளா் ஜி.பழனி, ஊராட்சி மன்றத் தலைவா் முத்துலட்சுமி முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முடிவில் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளா் ஆ.இளங்கோவன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.