முகப்பு
திருவண்ணாமலை

பள்ளி ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், பள்ளிக்கு வியாழக்கிழமை முதல் 3 நாள்கள் விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில், பள்ளியில் கரோனா பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் மகேஸ்வரி உள்பட 103 ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் சுதா, மருத்துவா் மேஜா் சிவஞானம், ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் செந்தில்குமாா் மற்றும் மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.