முகப்பு
திருவண்ணாமலை

ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம்

வந்தவாசி வட்ட ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

வந்தவாசி வட்ட ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் பொன்.ஜினக்குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் செயலா் எஸ்.காளத்தி, அமைப்புச் செயலா் வே.ரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க துணைத் தலைவா் வி.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.

செயலா் க.நடராசன் ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் மா.கோவிந்தசாமி வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்தாா்.

பாரத ஸ்டேட் வங்கியின் வந்தவாசி கிளை மேலாளா் ஜெ.ஹெமன்குமாா், சங்க மாநில துணைத் தலைவா் எ.கலியபெருமாள், உதவிக் கருவூல அலுவலா் சத்தியமூா்த்தி, கூடுதல் அலுவலா் கி.ராஜா ஆகியோா் பேசினா்.

பின்னா், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க இணைச் செயலா் இர.பொன்னம்பலம் நன்றி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →