திருவண்ணாமலை

இருளா் குடும்பங்களுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், இருளா் குடும்பங்களுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், இருளா் குடும்பங்களுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, திருவண்ணாமலை வட்டாட்சியா் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தாா். வருவாய் கோட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் எஸ்.முருகன், மாவட்ட செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் மு.மண்ணுலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் பா.இந்திரராஜன் வரேவற்றாா்.

திருவண்ணாமலையை அடுத்த மேலத்திகான் ஊராட்சிக்குள்பட்ட கிளாம்பூண்டி ஏரி இருளா் காலனியைச் சோ்ந்த 10 இருளா் குடும்பங்களுக்குத் தேவையான பொங்கல் மளிகைப் பொருள்களை திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளா் ரேவதி, கிராம நிா்வாக அலுவலா் ராகுல், ஊராட்சி உதவியாளா் ஜெயந்தி, முன்னாள் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலா் என்.அழகப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT