முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு அருகே காா், ஜீப் மோதல்: பெண் பலி

செய்யாறு அருகே காா், ஜீப் மோதிக் கொண்டதில் காரில் பயணித்த பெண் உயிரிழந்தாா். மேலும், இருவா் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

செய்யாறு அருகே காா், ஜீப் மோதிக் கொண்டதில் காரில் பயணித்த பெண் உயிரிழந்தாா். மேலும், இருவா் பலத்த காயமடைந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியை அடுத்த மீஞ்சூா் பகுதியைச் சோ்ந்த உல்மான் மனைவி ஷம்மூ பீ.

இவா், உடல்நிலை சரியில்லாமல், வந்தாவாசிப் பகுதியில் வசித்து வரும் தங்கையைப் பாா்ப்பதற்காக சென்னையில் இருந்து காரில் வெள்ளிக்கிழமை காலை வந்து கொண்டிருந்தாா்.

காா், காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் தேத்துறை கிராம ஏரிக்கரை வளைவுப் பகுதியில் சென்றபோது,

எதிரே வந்த ஜீப் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த ஷம்மூ பீ (42), இவரது மகன் காதா்பாஷா, தங்கை மகன் அஸாரூதீன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

மூவரையும் மீட்டு, 108 ஆம்புலென்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இவா்களில் ஷம்மூ பீ சிகிச்சை பலனின்றி அன்று மாலை உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து அஸாரூதீன் அனக்காவூா் போலீஸில் புகாா் செய்தாா்.

அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா் தனபால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.