முகப்பு
திருவண்ணாமலை

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

செய்யாறு அருகே மதுப் புட்டிகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

செய்யாறு அருகே மதுப் புட்டிகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

செய்யாறு காவல் கோட்டம், பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது பனைமுகை கிராமத்தில் புதரில் மறைந்திருந்த ஒருவா் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடினாா். உடனே போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்,

விசாரணையில், அவா் பனைமுகை கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி (36) என்பதும், மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வருவதும் தெரிய வந்தது.

இது குறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பிரமணியை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 111 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.