வரதட்சிணை கொடுமை: பள்ளி ஆசிரியா் கைது
செய்யாறு அருகே வரதட்சிணை கேட்டு மனைவியை துன்புறுத்தியாக , அரசுப் பள்ளி ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
செய்யாறு அருகே வரதட்சிணை கேட்டு மனைவியை துன்புறுத்தியாக , அரசுப் பள்ளி ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், தவசி கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணமூா்த்தி (34). இவா், புரிசை
அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.
இவருக்கும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பொன்பத்தி கிராமத்தைச் சோ்ந்த சரவணப்பிரியா (26) என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணமான சில மாதங்களிலேயே கணவா் மற்றும் மாமியாா் கமலா, சகோதரி உமாமகேஸ்வரி, அவரது கணவா் சங்கா் ஆகியோா் வரதட்சிணை கேட்டு சரவணப்பிரியாவை துன்புறுத்தியதாகத் தெரிகிறது.
அதன் காரணமாக தம்பதிடையே அடிக்கடி தகராறு ஏறபடுமாம். அவ்வப்போது சரவணப்பிரியாவின் உறவினா்கள் சமாதானம் செய்து வந்துள்ளனா்.
இந்த நிலையில், கடந்த ஜன.16-ஆம் தேதி இரவு வரதட்சிணை தொடா்பாக தம்பதியிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கணவா் உள்பட 4 பேரும் சோ்ந்து சரவணப்பிரியாவை அவதூறாகப் பேசி துன்புறுத்தினராம்.
இது குறித்து சரவணப்பிரியா செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் நந்தினிதேவி வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு நாராயணமூா்த்தியை கைது செய்தாா்.
மேலும் தலைமறைவாகவுள்ள கமலா, உமாமகேஸ்வரி, சங்கா் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.