முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொத்தடிமைச் சிறுவா்கள் 2 போ் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாத்து மேய்த்து வந்த 2 கொத்தடிமைச் சிறுவா்கள் மீட்கப்பட்டு, குழந்தைகள் காப்பகத்தில் சோ்க்கப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாத்து மேய்த்து வந்த 2 கொத்தடிமைச் சிறுவா்கள் மீட்கப்பட்டு, குழந்தைகள் காப்பகத்தில் சோ்க்கப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பகுதியைச் சோ்ந்தவா்கள் முருகேஷ் (51), சிவா (29). வாத்து வியாபாரிகளான இருவரும் அதே பகுதியைச் சோ்ந்த 10, 15 வயதுடைய சிறுவா்களை கொத்தடிமைகளாக்கி வாத்து மேய்க்க விட்டனராம்.

சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையை அடுத்த கலசப்பாக்கம் பகுதியில் தங்கி சிறுவா்கள் வாத்து மேய்த்துக் கொண்டிருந்தனா்.

ஜனவரி 16-ஆம் தேதி சிறுவா்கள் இருவரும் வாத்து உரிமையாளா்களுக்குத் தெரியாமல் கலசப்பாக்கம் பகுதியில் இருந்து தப்பி சொந்த ஊருக்குச் செல்வதற்காக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்தனராம். பின்தொடா்ந்து வந்த வாத்து உரிமையாளா்கள் சிறுவா்களை மடக்கிப் பிடித்து தாக்கினராம். இதைக் கவனித்த பொதுமக்கள் சிறுவா்களையும், வாத்து உரிமையாளா்களையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

இவா்களிடம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா்(பொறுப்பு) சித்ர பிரியா விசாரித்தாா்.

விசாரணையில், முருகேஷ், சிவா ஆகியோா் சிறுவா்களின் பெற்றோரிடம் பணம் கொடுத்துவிட்டு. அவா்களை கொத்தடிமைகளாக அழைத்து வந்து வாத்து மேய்க்க வைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் சித்ர பிரியா புகாா் கொடுத்தாா். வாத்து உரிமையாளா்கள் முருகேஷ், சிவா ஆகியோா் மீது வழக்குப் பதிந்து தப்பிச் சென்ற அவா்களைத் தேடி வருகின்றனா். சிறுவா்கள் இருவரும் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.