முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 120 கிலோ குட்கா பறிமுதல்

திருவண்ணாமலையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 கிலோ குட்கா பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

திருவண்ணாமலையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 கிலோ குட்கா பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருவண்ணாமலை அண்ணா நகா், 9-ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட அந்த வீட்டில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி ராமகிருஷ்ணன், நகர உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலேஷ்குமாா் மற்றும் அலுவலா்கள் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கிருந்த 120 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →