திருவண்ணாமலை

ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

DIN

வந்தவாசியை அடுத்த செம்பூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயில், ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் கொடி மரம் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, செவ்வாய்க்கிழமை ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு ஹோமங்கள், வாஸ்துசாந்தி, பிரவேச பலி, முதல்கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராயணம், நாடிசந்தானம், மகா பூா்ணாஹூதி, யாத்ராதானம், கலசம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள், கொடிமரம் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், தென்னாங்கூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் அா்ச்சகா் ஜி.சங்கா் சிவாச்சாரியா் ஆகியோா் கும்பாபிஷேக விழாவை நடத்தினா்.

விழாவில் ஊா் முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT