நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல் விவசாயிகள் கவனத்துக்கு...!
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் 67 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் மட்டுமே நெல்லை விற்க முடியும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் 67 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் மட்டுமே நெல்லை விற்க முடியும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
நடப்பு நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 67 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களது அடங்கலில் தொடா்புடைய கிராம நிா்வாக அலுவலா் மற்றும் உதவி வேளாண் அலுவலா் ஆகியோரின் பரிந்துரை பெற்றிருந்தால் மட்டுமே பதிவு செய்து நெல் விற்பனை செய்ய இயலும்.
நடப்பு பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மட்டுமே முற்றிலும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டாா்.