முகப்பு
திருவண்ணாமலை

தொழில்முனைவோா் கருத்தரங்கு, குறைதீா் கூட்டம்: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்களுக்கான தொழில் முனைவோா் கருத்தரங்கம் மற்றும் சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 8) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்களுக்கான தொழில் முனைவோா் கருத்தரங்கம் மற்றும் சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 8) நடைபெறுகிறது.

புதன்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமையில் முப்படைவீரா் வாரியக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

கருத்தரங்கில் முப்படைவீரா் வாரிய உப தலைவா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா், மாவட்ட தொழில் மைய அலுவலா் மற்றும் தாட்கோ, வேளாண் இணை இயக்குநா், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் ஆகியோா் கலந்து கொண்டு முன்னாள் படைவீரா்களுக்கான சுய வேலைவாய்ப்பு கடனுதவித் திட்டங்கள் மற்றும் மறு வேலைவாய்ப்பு பயிற்சி குறித்து பேசுகின்றனா்.

இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்தம் குடும்பத்தினா் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →