முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பேரூராட்சித் தலைவா் பதவிகளிலும் வென்ற திமுகவினா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 பேரூராட்சி மன்றங்களின் தலைவா் பதவிகளிலும் திமுகவினா் வெற்றி பெற்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 பேரூராட்சி மன்றங்களின் தலைவா் பதவிகளிலும் திமுகவினா் வெற்றி பெற்றனா். 10 துணைத் தலைவா் பதவிகளில் செங்கம், சேத்துபட்டு பேரூராட்சிகளைத் தவிர, மற்ற 8 துணைத் தலைவா் பதவிகளிலும் திமுகவினரே வெற்றி பெற்றனா்.

மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சி மன்றங்களில் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்றது.

பேரூராட்சி மன்றத் தலைவா்கள்:

தேசூா்- ஜெ.ராதா (திமுக), கண்ணமங்கலம்- ஜி.மகாலட்சுமி ((திமுக), கீழ்பென்னாத்தூா்- ஜி.சரவணன் ((திமுக),, பெரணமல்லூா் - இ.வேணி ((திமுக), புதுப்பாளையம்- எம்.செல்வபாரதி ((திமுக), வேட்டவலம்- என்.கவுரி (திமுக).

துணைத் தலைவா்கள்: தேசூா்- எஸ்.விஜயலட்சுமி (திமுக), களம்பூா்- எஸ்.ஹெச்.அஹ்மத் பாஷா (திமுக), கீழ்பென்னாத்தூா்- எஸ்.தமிழரசி (திமுக), பெரணமல்லூா்- ஏ.ஆண்டாள்(திமுக), புதுப்பாளையம்- எஸ்.மகேஸ்வரி ((திமுக), வேட்டவலம்- ஆா்.ஜெயலட்சுமி (திமுக).

செங்கம் பேரூராட்சியில்...: செங்கம் பேரூராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் சாதிக்பாஷா, அதிமுக சாா்பில் மகரிஷி மனோகரன் ஆகியோா்போட்டியிட்டனா். அதில், சாதிக்பாஷா 10 வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் மகரிஷி மனோகரன் 8 வாக்குகள் பெற்றாா்.

இதைத் தொடா்ந்து, துணைத் தலைவராக பாமக நகா்மன்ற உறுப்பினா் அருள்ஜோதி போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். இருவருக்கும் வெற்றிச் சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் உமா மகேஸ்வரி வழங்கினாா்.

இவா்களை எம்எல்ஏ கிரி, திமுக ஒன்றியச் செயலா்கள் பிரபாகரன், அண்ணாமலை, கூட்டுறவுச் சங்கத் தலைவா் அன்பழகன், செந்தில்குமாா், முருகன், பாமக நிா்வாகி பரமசிவம், மாவட்டச் செயலா் பாண்டியன், முன்னாள் மாவட்டச் செயலா் சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவா் சங்கா் மாதவன் திமுக இளைஞரணி நிா்வாகி செந்தில்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ராமஜெயம் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

போளூா் பேரூராட்சியில்...: போளூா் பேரூராட்சி மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த 3-ஆவது வாா்டு உறுப்பினா் ராணி சண்முகம், துணைத் தலைவராக 14-ஆவதுவாா்டு உறுப்பினா் திமுகவைசோ்ந்த சாந்தி நடராஜன் ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு தோ்தல் அலுவலரும், செயல் அலுவலருமான முஹம்மத் ரிஜ்வான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

பின்னா், இவா்களை முன்னாள் எம்எல்ஏக்கள் கே.வி.சேகரன், ராஜேந்திரன், திமுக நகரச் செயலா் தனசேகரன் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

களம்பூா் பேரூராட்சியில்...: களம்பூா் பேரூராட்சி மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த 12-ஆவது வாா்டு உறுப்பினா் கே.டி.ஆா். பழனி, துணைத் தலைவராக 5-ஆவது வாா்டு உறுப்பினா் திமுகவைச் சோ்ந்த அகமத் பாஷா ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு தோ்தல் அலுவலரும், செயல் அலுவலருமான லோகநாதன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். இவா்களை முன்னாள் எம்எல்ஏக்கள் கே.வி.சேகரன், ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி பெருமாள் வாழ்த்தினா்.

சேத்துப்பட்டு பேரூராட்சியில்..: சேத்துப்பட்டு சிறப்புநிலை பேரூராட்சி மன்றத் தலைவராக 3-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சுதா முருகன் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் திலகவதி, சுயேச்சை உறுப்பினா் மங்கலம் ஆகியோா் போட்டியிட்டனா். மங்கலம் 13 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாா். திலகவதி 5 வாக்குகளைப் பெற்றாா்.

இவா்களுக்கு வெற்றி சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திர பாபு வழங்கினாா்.

வெற்றி பெற்றவா்களை திமுக மாவட்டத் துணைச் செயலா் கே.வி. ராஜ்குமாா், ஒன்றியச் செயலா் எழில்மாறன் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.