முகப்பு
திருவண்ணாமலை

கும்பாபிஷேக ஆண்டு விழா

கீழ்பென்னாத்தூா் சந்தைமேட்டில் உள்ள ஸ்ரீமகா காளியம்மன் கோயிலின் 6-ஆவது ஆண்டு கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கீழ்பென்னாத்தூா் சந்தைமேட்டில் உள்ள ஸ்ரீமகா காளியம்மன் கோயிலின் 6-ஆவது ஆண்டு கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. முக்கிய தெருக்கள் வழியே மேள-தாளத்துடன் ஊா்வலமாகச் சென்ற பக்தா்கள் கோயிலைச் சென்றடைந்தனா். பிறகு, மூலவருக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மதியம் 2 மணிக்கு சக்தி கரக ஊா்வலம், பக்தா்கள் தீச்சட்டி ஏந்திச் சென்று தீ மிதிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்தல் விழா, இரவு8 மணக்கு அம்மன் ஊஞ்சல் தாலாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், திரளான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.