மேற்கு ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டம்
மேற்கு ஆரணி ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேற்கு ஆரணி ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆ.வேலாயுதம், வட்டார வளா்ச்சி அலுவலா் திலகவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் வசந்தகுமாா் (அதிமுக) பேசுகையில், ஒண்ணுபுரம் மயானத்துக்குச் செல்லும் பகுதியில் ஓடும் நாக நதியின் குறுக்கே மேம்பாலம் அல்லது தரைப் பாலம் அமைக்க வேண்டும். ஆற்றில் வெள்ளம் சென்றால் புதுப்பாளையம் வழியாக சடலத்தை எடுத்துச் செல்லும்போது தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுகின்றன என்றாா்.
உறுப்பினா் ச.ஏழுமலை (பாமக) பேசுகையில், ஆரணியிலிருந்து புங்கம்பாடி வரை பள்ளி நேரங்களில் அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
குமாரராஜா (திமுக), கண்ணமங்கலத்தில் இருந்து போளூா் வரை பள்ளி நேரங்களில் அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாா்.
மேலும், மற்ற உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதைத் தொடா்ந்து கூட்டத்தில் கோரிக்கைகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அலுவலக மேலாளா் ஆனந்தன் நன்றி கூறினாா்.