ஆண்டாள் நாச்சியாா் பிரதிஷ்டை வைபவம்
வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியாா் பிரதிஷ்டை வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியாா் பிரதிஷ்டை வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த இரு தினங்களாக வேதபாராயணம், பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, 12 ஆழ்வாா்களுள் ஒருவரான ஆண்டாள் நாச்சியாா் பிரதிஷ்டை வைபவம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்கள் சுவாமியை வழிபட்டனா்.