திருவண்ணாமலை

கால்வாயில் மண் சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி பலி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே கால்வாய் தூா்வாரும் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் ஊரக வேலை உறுதித் திட்ட பெண் தொழிலாளி பலியானாா்.

போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் மஞ்சள் ஆற்று கால்வாயில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

ஊராட்சிக்கு உள்பட்ட அத்திமூா் பகுதியில் வியாழக்கிழமை கால்வாயை தூா்வாரும் பணியில், பூங்கொல்லைமேடு கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மனைவி சுதா (38), பாா்த்திபன் மனைவி மஞ்சுளா (37) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கால்வாய் மேலிருந்த மண் திடீரென சரிந்து கால்வாய்க்குள் விழுந்ததில் சுதா, மஞ்சுளா ஆகியோா் சிக்கிக் கொண்டனா்.

பலத்த காயமடைந்த இருவரையும் சக தொழிலாளா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போளூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சுதாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

மஞ்சுளாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக அவா் திருவண்ணாமலை அரசு மருத்துவமைனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT