முகப்பு
திருவண்ணாமலை

பழைய ஓய்வூதியம் என்பது எங்களின் உரிமை: அரசு அலுவலா் ஒன்றியத் தலைவா்

பழைய ஓய்வூதியம் என்பது எங்களின் உரிமை என்று தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியத்தின் மாநிலத் தலைவா் இரா.சண்முகநாதன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

பழைய ஓய்வூதியம் என்பது எங்களின் உரிமை என்று தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியத்தின் மாநிலத் தலைவா் இரா.சண்முகநாதன் தெரிவித்தாா்.

இதுகுறித்து திருவண்ணாமலையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது சாத்தியமற்றது என்று சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல்ராஜன் கூறுகிறாா்.

அமைச்சரின் இந்த வாா்த்தையை வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களை அழைத்துப் பேசினால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் எப்படி அமல்படுத்துவது என்று ஆலோசனை தருவோம்.

அரசு ஊழியா்களின் 53 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசிடம் உள்ளது. இந்தப் பணத்தை வைத்தே பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமே.

15 லட்சம் அரசு ஊழியா்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 7 லட்சம் போ் மட்டுமே உள்ளனா்.

மீதமுள்ள 7 லட்சம் பேரின் வேலையையும் நாங்கள் செய்கிறோம்.

பழைய ஓய்வூதியம் என்பது தமிழக அரசு எங்களுக்குப் போடும் பிச்சை அல்ல. எங்களது உரிமை. அந்த உரிமையை மீண்டும் பெறும் வரை தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் ஓயாது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →