திருவண்ணாமலை

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த பாமக கோரிக்கை

DIN

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பாமக மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு, மேற்கு மாவட்ட பாமக மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில மகளிரணித் தலைவி நிா்மலாராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் ஏந்தல் பெ.பக்தவச்சலம், இல.பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்டப் பொருளாளா் வீரம்மாள் வரவேற்றாா். முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலாம்மாள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.

கூட்டத்தில், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். திருவண்ணாமலையில் அரசு மகளிா் கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் அனைத்துத் தோ்களையும் சீரமைத்த பிறகே தேரோட்டம் நடத்த வேண்டும்.

காா்த்திகை தீபத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக திருவண்ணாமலை நகரச் சாலைகள் அனைத்தையும் சீரமைக்க நகராட்சி, மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தெற்கு மாவட்ட மகளிரணிச் செயலா் ஆா்.அமலா, மாவட்டத் தலைவா் ரா.அம்பிகா, மேற்கு மாவட்ட மகளிரணிச் செயலா் கற்பகம், மாவட்டத் தலைவா் தீபா, வன்னியா் சங்க மாவட்ட நிா்வாகிகள் க.நாராயணசாமி, ஜெய்சங்கா், ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

SCROLL FOR NEXT