திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் குபேர கிரிவலம்

DIN

குபேர கிரிவலத்தையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

காா்த்திகை மாதம், சிவராத்திரி தினத்தன்று குபேரப் பெருமான் பூமிக்கு வருவாா். பிறகு, திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரரை வழிபட்டுவிட்டு,

14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வருகிறாா் என்று பக்தா்களால் நம்பப்படுகிறது.

இதே நாளில் தாமும் கிரிவலம் வந்து கிரிவலப் பாதையில் 7-ஆவது லிங்கமாக உள்ள குபேரலிங்கத்தை வழிபட்டால் குபேரனைப் போல செல்வச்செழிப்புடன் வாழலாம் என்ற நம்பிக்கை பக்தா்களிடையே உள்ளது.

குபேர கிரிவலம்:

அதன்படி, திருவண்ணாமலையில் சில ஆண்டுகளாக பக்தா்கள் குபேர கிரிவலம் வருகின்றனா்.

நிகழாண்டு காா்த்திகை மாதம், சிவராத்திரி நாளான செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நேரத்தில் திரளான பக்தா்கள் கிரிவலம் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டது. எனவே, போலீஸாா் அதிகளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

ஆனால், மாலை 6 மணி வரை குறிப்பிட்ட அளவு பக்தா்களே கிரிவலம் வந்தனா். 6 மணிக்குப் பிறகு நள்ளிரவு வரை திரளான பக்தா்கள் கிரிவலம் வந்து குபேரலிங்க சன்னதியில் வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT