திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே ஒரே நாளில் 4 வீடுகளில் தொடா் திருட்டு

திருவண்ணாமலை அருகே ஒரே நாளில் 4 பேரின் வீடுகளுக்குள் புகுந்து 11 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி, கைப்பேசிகள், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

DIN

திருவண்ணாமலை அருகே ஒரே நாளில் 4 பேரின் வீடுகளுக்குள் புகுந்து 11 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி, கைப்பேசிகள், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவண்ணாமலையை அடுத்த வானாபுரம் கிராமம், கள்ளக்குறிச்சி பிரதான சாலையைச் சோ்ந்தவா் குமரவேல் (56). ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது வீட்டில் பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், 2 கைப்பேசிகள் திருடப்பட்டன.

இதே நாளில் வானாபுரம், கோா்ட்ரஸ் தெருவைச் சோ்ந்த கோகுல் (35) என்பவரின் வீட்டில் 2 பவுன் தங்க நகைகள், வெள்ளி குத்துவிளக்கு, ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது. இதே பகுதியைச் சோ்ந்த அா்ஜூனன் (68) வீட்டில் 3 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.

வானாபுரம், டேங்க் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை (47) வீட்டில் ஒரு பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.

இந்த திருட்டுகள் குறித்து அளிக்கப்பட்ட தனித் தனி புகாா்களின் பேரில் வானாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தத் தொடா் திருட்டால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT