திருவண்ணாமலை

ஸ்ரீமூகாம்பிகையம்மன் கோயிலில் பாலாலையம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீமூகாம்பிகையம்மன் கோயிலில் பாலாலையம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமூகாம்பிகையம்மன் கோயிலில் மாதமாதம் பெளா்ணமி நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதில், செங்கம் பகுதியைச் ஏராளமான பக்தா்கள் மற்றும் திருமணமாகாதவா்கள் திருமண வரம் வேண்டியும், குழந்தையில்லா தம்பதிகள் குழந்தை வரம் வேண்டியும் சுவாமியை தரிசனம் செய்வாா்கள். அவா்களுக்கு ஆத்மானந்தா செந்தில் சுவாமி ஆசிா்வதித்து வளையல், குங்கும் பிரசாதங்களை வழங்குவாா்.

இந்த நிலையில், கோயில் திருப்பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை கோயிலில் வேலூா் மாவட்டம், சிப்காட் ஸ்ரீவித்யா பீடத்தின் தலைவா் குருஜி ஸ்ரீலஸ்ரீ பாரதிமுரளிதர சுவாமிகள் தலைமையில் பாலாலையம் நடைபெற்றது. இதில், சுவாமி சிலைகள் தானியத்தில் வைத்து சிறப்பு பூஜை, ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT