திருவண்ணாமலை

வா்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்தப்படும் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள்

DIN

போளூா் நகரில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் அதிகளவில் வா்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பேரூராட்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். நகரில் டீ கடைகள், உணவகங்கள் என 100-க்கும் கடைகள் அமைந்துள்ளன. இவற்றில் சமையலுக்காக வா்த்தக எரிவாயு உருளைகள் பயன்படுத்தப்படுகின்றன.

வீட்டு உபயோக எரிவாயு உருளை ரூ.970-க்கும், வா்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை ரூ.1200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், நகரில் பெரும்பாலான உணவகங்கள், டீ கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை பயன்படுத்தி வருகின்றனா். இதனால் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் வா்த்தக கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT