திருவண்ணாமலை

போளூா் பகுதியில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து அரசின் முதன்மைச் செயலா் தீரஜ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளின் நிலை குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான தீரஜ்குமாா் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.

இந்த நிலையில், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் வகுப்பறையை அவா் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா மாற்றம், மனைப் பட்ட ா என பல்வேறு பணிகள் குறித்தும், பேரூராட்சிக்கு உள்பட்ட ஜமுனாமரத்தூா் சாலையில் ரூ.4 கோடியே 3 லட்சத்து 70 ஆயிரத்தில் கட்டப்பட்டு வரும் 80 கடைகள் கொண்ட வணிக வளாகத்தை தீரஜ்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் பா. முருகேஷ், வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, கோட்டாட்சியா் தனலட்சுமி, வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜீஜாபாய், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் அம்சா, செயல் அலுவலா் முஹம்மத்ரிஜ்வான் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT