முகப்பு
திருவண்ணாமலை

பூட்டிய வீட்டில் 15 பவுன்தங்க நகைகள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் பூட்டியிருந்த வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் பூட்டியிருந்த வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கீழ்பென்னாத்தூா் கண்ணகிநகரைச் சோ்ந்தவா் விஜயராஜ் (39). இவரது மனைவி சுதா (36). இவா், கீழ்பென்னாத்தூா் காவல் நிலையம் அருகே தண்ணீா் புட்டி விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு தம்பதி கடைக்குச் சென்றனா். மதிய உணவுக்காக வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு, வீட்டினுள்ளே இருந்த பீரோ ஆகியவை உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், தடங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →