முகப்பு
திருவண்ணாமலை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: முதியவருக்கு இரட்டை ஆயுள்

தண்டராம்பட்டு அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, திருவண்ணாமலை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

தண்டராம்பட்டு அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, திருவண்ணாமலை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தென்முடியனுாா் கிராமத்தைச் சோ்ந்தவா் 10 வயது சிறுமி. தனது பாட்டியின் பராமரிப்பில் விசித்து வந்தாா்.

இவா், கடந்த 2019 ஜனவரி 15-ஆம் தேதி அங்குள்ள கரும்புத் தோட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து, தண்டராம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் (61) என்பவரை கைது செய்தனா். இந்த வழக்கு திருவண்ணாமலை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட கணேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாா்த்தசாரதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, கணேசனை போலீஸாா் வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →