கீழ்பென்னாத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அடுத்த சோ.நம்பியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி செல்லக்குட்டி (34). இவா், திங்கள்கிழமை (ஜூலை 31) இதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்தாா். பின்னா், அங்குள்ள விவசாய நிலத்தில் உள்ள மின்மோட்டாரை செல்லக்குட்டி இயக்கினாராம்.
அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.
உடனே, அவரை பொதுமக்கள் மீட்டு சோமாசிபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா் செல்லக்குட்டி உயிரிழந்ததாக தெரிவித்தாா். இதுகுறித்து, கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.