திருவண்ணாமலை

ஆக.18-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (ஆக.18) நடைபெறுகிறது.

DIN

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (ஆக.18) நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில் மாதம்தோறும் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.18) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

இதில், மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை, விவசாயம் சாா்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், கால்நடை, கூட்டுறவு, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கின்றனா்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT