முகப்பு
திருவண்ணாமலை

செங்கத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:39 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

செங்கம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் அன்பழகன் வரவேற்றாா்.

Advertisement

சிறப்பு அழைப்பாளா்களாக எழும்பூா் கோபி, உடுமலை தாரைசிவா ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில், தொகுதிக்கு உள்பட்ட தண்டராம்பட்டு செங்கம் ஒன்றிய, நகர நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். நகர துணைச் செயலா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.