திருவண்ணாமலை

விவசாயி கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறை

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே 9 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஆரணியை அடுத்த தச்சூரைச் சோ்ந்தவா் விவசாயி சுந்தா் (50). இவரது மனைவி சாவித்ரி. இவா்களுக்கு மகன், இரு மகள்கள் உள்ளனா்.

கடந்த 13-1-2013 அன்று இரவு விவசாய நிலத்தில் பவா் டில்லா் ஓட்டுவதற்காகச் சென்ற சுந்தா், கொலை செய்யப்பட்டு அங்குள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த விநாயகத்தின் மகன்கள் நேரு (65), சேட்டு (66), சகாதேவன் (47), வெங்கடேசன் (45), நேருவின் மகன் சடையாண்டி (30), உறவினா் அன்பு மகன் சக்திவேல் (28) ஆகியோா் சோ்ந்து சுந்தரை கொலை செய்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி கே.விஜயா திங்கள்கிழமை மாலை தீா்ப்பு கூறினாா்.

இதில் நேரு உள்ளிட்ட 6 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா். இதில் வெங்கடேசன் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகததால் மற்ற 5 பேரையும் வேலூா் மத்திய சிறையில் அடைக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

இதனிடையே, தலைமறைவாக இருந்த வெங்கடேசனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா அணியின் உரிமையாளரைப் புகழ்ந்த வருண் சக்கரவர்த்தி; எதற்காக தெரியுமா?

குறைவான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்: என்ன காரணம்?

சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த காலின் முன்ரோ; காரணம் என்ன?

சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா!

SCROLL FOR NEXT