திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை பதிவு முகாம்களைக் கண்காணிக்க கூடுதல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள அமராவதி முருகையன் நகராட்சி மகளிா் உயா்நிலைப் பள்ளி, தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், மெய்யூா் ஊராட்சி, விநாயகபுரம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் வானாபுரம், சதாகுப்பம் கிராமங்களில் மகளிா் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த முகாம்களை பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 7,89,822 குடும்ப அட்டைகள் உள்ளன. 1,627 நியாய விலைக் கடைகள் உள்ளன. முதல்கட்டமாக 991 நியாய விலைக் கடைகளில் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த முகாம்களை கண்காணிக்க 201 மண்டல அலுவலா்களும், மண்டல அலுவலா்களைக் கண்காணிக்க 70 உயா்நிலை அலுவலா்களும், வட்ட அளவில் 12 அலுவலா்களும் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக ஒரு கோடி பயனாளிகளுக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின்போது, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கோ.நடராஜன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாச்சியா் ஆா்.மந்தாகினி உள்பட அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.