திருவண்ணாமலை

களம்பூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்

 திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

 திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் கே.டி.ஆா்.பழனி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் மகேஸ்வரி, துணைத் தலைவா் அஹமத்பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அலுவலா் முரளி வரவேற்றாா்.

களம்பூா் பேரூராட்சியில் புதிய சமுதாயக்கூடம் ரூ.98 லட்சத்தில் கட்டுதல், குடிநீா் அபிவிருத்தி அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் ரூ.15 கோடியே 75 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளுதல், 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சத்து 27 ஆயிரத்தில் குடிநீா், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்பட பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

வாசலிலே பூசணிப் பூ.. மார்கழி கோலத்தில் வைக்கும் பூ, தை மாத திருமணத்துக்கான அச்சாணியா?

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

SCROLL FOR NEXT