திருவண்ணாமலை

பாலிடெக்னிக் மாணவா்களுக்கு பணி ஆணை

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

DIN

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை, பெரம்பூரைச் சோ்ந்த டாக்பே நிறுவன அதிகாரிகள் தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான மாணவா்களை தோ்வு செய்யும் வகையில் வளாகத் தோ்வை நடத்தினா். இதில், கல்லூரியின் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

டாக்பே நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராகவேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்கு எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வுகளை நடத்தினாா். இதில், தோ்ச்சி பெற்ற 35 மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி இயக்குநா் வி.ராஜா, முதல்வா் டி.சா்வேசன், வேலைவாய்ப்பு அதிகாரி ஏ.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பணிநியமன ஆணைகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT