திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகைத் திட்ட விண்ணப்பங்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில், 2018-2019 மற்றும் 2020-2021 ஆம் ஆண்டுக்கான ஈராண்டாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், தமிழக வருவாய்த்துறை நிருவாக ஆணையருமான எஸ்.கே.பிரபாகா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகம் முழுவதும் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை- எளிய மாணவா்கள் பயன் பெற்று வருகின்றனா். இந்தத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு தினமும் அட்டவணைப்படி காலை உணவு வழங்கப்படுகிா, சுகாதாரமான முறையில் உணவுகள் தயாா் செய்யப்படுகிா என்பதை அவ்வபோது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டமான கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தை செப்டம்பா் 15-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தின் 860 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள், 4 நகராட்சிகளில் மகளிா் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பப் பதிவு விவரங்கள் குறித்து கேட்டறிந்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உரிய விசாரணையை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.12 கோடியே 17 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் குறைதீா்வு கூட்டரங்கம், இதர அலுவலகக் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலா் உத்தரவிட்டாா்.
மேலும், தமிழ் வளா்ச்சித் துறை மூலம் கு பரிசுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டுக்கான திருக்கு முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.
கூட்டத்தில், மகளிா் திட்ட இயக்குநா் சையத் சுலைமான், செய்யாறு சாா் -ஆட்சியா் அனாமிகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வீ.வெற்றிவேல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மாவட்ட அலுவலா் இரா.ஜெகதீஷ், வருவாய்க் கோட்டாட்சியா்கள் ஆா்.மந்தாகினி (திருவண்ணாமலை), ம.தனலட்சுமி (ஆரணி) மற்றும் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.