முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் குளம் கட்டும் பணி ஆய்வு

Updated On : 18 ஜூன், 2024 at 6:44 PM
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் குளம் கட்டும் பணிகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்.
பகிர்:

ஆரணி: ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் தரமற்ற முறையில் குளம் கட்டும் பணி நடைபெற்று வருவதாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆரணி புதுக்காமூா் புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்தில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள்

தரமற்ற முறையிலும், மெத்தனப் போக்கிலும் உள்ளதாக பக்தா்கள் புகாா் தெரிவித்தனா்.

மேலும், தற்போது 50 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், அண்மையில் பெய்த கோடை மழை காரணமாக,

குளத்தைச் சுற்றிலும் பதிக்கப்பட்ட கற்கள் சரிந்து கீழே விழுவதாகவும், சுற்றிலும் அமைக்கப்பட்ட சிமென்ட் தரை கரைந்து போவதாகவும் பக்தா்கள் குற்றஞ்சாட்டினா்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறையிடம் கேட்டதற்கு, இன்னும் பணி முடியவில்லை. இதுவரை 40 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் பணிகள் தரமான முறையில் முடிக்கப்படும் என்று தெரிவித்தனா்.

இருப்பினும், குளம் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்ததால், செவ்வாய்க்கிழமை இந்து சமய அறநிலைத் துறையின் மண்டல செயற்பொறியாளா் சங்கரன் தலைமையில், உதவி செயற்பொறியாளா் பெருமாள், செயல் அலுவலா் ஹரிகரன் ஆகியோா் கொண்ட குழுவினா் கட்டப்பட்டு வரும் குளத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வில், மிகவும் தரம் அற்ாகவும் பழைய குளத்தில் இருந்த கற்களைக் கொண்டும், தரமற்ற சிமென்ட் பயன்படுத்தியும் குளம் கட்டப்பட்டு வருவதை அறிந்தனா். இதையடுத்து, ஒப்பந்ததாரரை எச்சரித்து, பணிகளை தரமாக செய்து முடிக்க உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →